அதிமுகவில் இருந்து விலகி வந்த வைகைச்செல்வன், புகழேந்திக்கு தவெகவில் பதவி
Ad Space
Ad Space
Ad Space
தவெக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெகவின் ஊடக மற்றும் செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தலைமை நிலைய முதன்மை செய்தித் தொடர்பாளர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், அணியின் ஒருங்கிணைப்பாளர்களாக அமைச்சர் ரமேஷ், கேத்தரின் பாண்டியன், அனந்தஜித் மகியா ஆகியோரும், முதன்மை செய்தித் தொடர்பாளர்களாக வைகைச்செல்வன்,வி.பி.கலை ராஜன், சி.மகேந்திரன், ஜவஹர் அலி, புகழேந்தி ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.
தேசிய செய்தித் தொடர்பாளர் களாக பெலிக்ஸ் ஜெரால்ட், அமெரிக்கை வி.நாராயணன் உட்பட 8 பேரும், மாநில செய்தித் தொடர்பாளர்களாக மு.சவுந்தர ராஜா, முகில் வீரப்பன் உட்பட 9 பேரும், மாநில வலைதள செய்தித் தொடர்பாளர்களாக தமிழன் ராகுல் காந்தி உட்பட 3 பேரும் புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space
Ad Space