அனுராதபுரத்தில் நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது
Ad Space
Ad Space
அனுராதபுரம் பொசொன் நகர் திருவிழா மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று புதன்கிழமை (1) மூவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக, நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 3 சந்தேக நபர்களை அனுராதபுரம் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம் புபுதுபுர, வன்னியன்குலம மற்றும் லபியாவ நாரத மாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தர்க்கம், பின்னர் மோதலாக மாறியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர், தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space