திருக்கோவிலில் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்
Ad Space
Ad Space
திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (01) உத்தரவிட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (30) திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் உள்ள குறித்த போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். அவ்வேளையிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Ad Space
Ad Space