அனைத்துக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டு! எனும் பிரதான கோரிக்கையுடன் வேறு சில கோரிக்கைகளையும் வலியுறுத்திச் சம உரிமை இயக்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய ஆர்ப்பாட்டம் நாளை வெள்ளிக்கிழமை (06.02.2026) பிற்பகல்-02 மணியளவில் யாழ். நகரில் நடாத்தப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.