அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு சம்பள ஆணைக்குழுவின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும் என விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
சம்பள ஆணைக்குழுவைத் தவிர்த்து, போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சம்பள விவகாரங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவை தொழிற்சங்கத்தினர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள், சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் சேவை நிலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் சம்பள ஆணைக்குழு எதிர்வரும் ஆண்டின் முதற்காலப்பகுதியில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சபையில் உரையாற்றும்போதே அமைச்சர் லால் காந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.