மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன – ஆனால் போரின் உண்மைகள் வெளிவரவில்லை

கடந்த வருடம் இலங்கையின் மீது  பொருளாதார நெருக்கடி அரசியல் குழப்பங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.

நம்பிக்கை கொண்டவர்கள் அதில் சில ஒளிக்கீற்றுகளை கண்டனர் ஊழல் நிறைந்த மிகவும் திறமையற்றதாக காணப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் எந்நேரத்திலும் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டது.

சீற்றம் காரணமாக நாடு சுதந்திரத்திற்கு பிந்தைய தனது இனப்பிளவை கடந்து ஐக்கியப்பட்டிருந்தது.

இலங்கையின் தமிழ் – பெருமளவு இந்துஇ சிறுபான்மையினருக்கும்  பௌத்த பெரும்பான்மையினருக்கும் இடையில் நீடித்த நல்லுறவு ஏற்படலாம் என்ற நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் குறுகிய காலமே நீடித்தன.

சமூகங்களுக்கு இடையில் பாலங்களை உருவாக்குவதற்கான சமீபத்தைய பலவீன முயற்சி மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேமாதம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கையின் தற்போதைய அரசாங்கம்  இலங்கையின் உள்நாட்டுப்போரின் வரலாற்றை ஆராய்வதற்காக தென்னாபிரிக்க பாணியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த தீர்மானித்தது.உள்நாட்டுபோர் 40 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகி 2009 மே மாதம் முடிவிற்குவந்ததுஇஇலங்கை இராணுவத்தின் வெற்றிகரமான இரத்தக்களறி மிகுந்த இராணுவநடவடிக்கையின்போது கடற்கரையோரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தங்கள் சமீபத்தைய வரலாறுகளின் கடந்தகாலங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆசியநாடுகளின்  ஆர்வத்தை தூண்டாத குழப்பமான நடவடிக்கைகள் இலங்கையின் முயற்சிகள் வெற்றியளிக்காது என்பதை வெளிப்படுத்துகின்றன – அதற்கான அறிகுறிகளே அதிகமாக தென்படுகின்றன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான சட்டவமூலம் ஆகஸ்ட்மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அதற்கான விதிமுறைகள் உட்பட பல விடயங்கள் குறித்த விபரங்கள் வெளியாகாவில்லை.

எனினும குறிப்பிட்ட சட்டமூலத்தின் நகல்வடிவை பார்வையிட்ட தமிழ் தலைவர்கள் அதில் குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்வதற்கான  திட்டங்கள் எவையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.

அது எதிர்பார்க்ககூடிய விடயமே.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பை வழங்ககூடியதாக காணப்பட்டதுஇ குற்றம்சாட்டப்பட்ட பல அதிகாரிகள் தொடர்ந்தும் பதவியிலிருக்கும் இலங்கைக்கு குற்றமிழைத்தவர்களிற்கு மன்னிப்பு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஈர்க்ககூடிய விடயமாக தோன்றக்கூடும்.

உள்நாட்டுப்போரின் பயங்கரங்களையும் இலங்கையின் பிளவுபட்ட சமூகத்தில் அது விட்டுச்சென்ற வடுக்களையும் இலகுவில் மூடி மறைக்க முடியாது.

போரின் மிகவும் கொடுரமான பாரம்பரியங்களை கையாள்வது குறித்து உள்நாட்டு அரசசார்பற்ற அமைப்புகள் கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது- நாட்டின் பசுமை நிறைந்த வயல்வெளிகள் மற்றும் வனங்களில் பெருமளவு மனித புதைகுழிகள் காணப்படுகின்றனஇஇதில் மிகசிறிய எண்ணிக்கையானவையே 20- இனம்காணப்பட்டு நூற்றுக்கணக்கான உடல்கள் தோண்டிஎடுக்கப்பட்டுள்ளன.

உடல்கள் தோண்டியெடுக்கப்பட்ட விதத்தில் பல தவறுகள் காணப்படுவதாக அந்த அறி;க்கை தெரிவிப்பதுடன் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலும் பல தவறுகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளது.

அந்த செயற்பாடுகள் உண்மையை கண்டறிவதற்கு பதில் அதனை இன்னமும் ஆழமாக மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகள் போல காணப்படுகின்றன.

யுத்தத்தின் கசப்பான உண்மைகளை கண்டறிவதற்கான முன்னைய முயற்சிகள் தோல்வியடைந்துள்ள போதிலும் தனது முயற்சிகள் வெற்றியளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்தமாதம் தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்தார்.

மூடிமறைக்கின்றோம என எவரும் குற்றம்சாட்ட முடியாது ஏனென்றால் வெளிநாட்டுக்கண்காணிப்பாளர்களை அழைப்போம் என அவர் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்கஆணைக்குழுவை அமைக்கும் முயற்சியை யுத்தம் நடைபெற்ற விதம் குறித்து சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்இகுற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைகளை புறக்கணிக்கும்  ஒரு முயற்சியாக கருதும் ரணில்விக்கிரமசிங்கவை விமர்சிப்பவர்கள் தாங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என தெரிவிக்கின்றனர்.

 

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து சமீபத்தில் ஜெனீவாவில் இடம்பெற்ற அமர்வில் மனித உரிமைகளிற்கான பிரதி ஆணையாளர் நடா அல் நசீவ் இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்தகாலத்தை கையாள்வதற்கான முயற்சிகளில் பொறுப்புக்கூறலே அடிப்படை வெற்றிடமாக காணப்படுகின்றது  என்றார் அவர்.

தென்னாபிரிக்க  மாத்திரமே இலங்கை முன்னால் உள்ள ஒரு தெரிவு இல்லைஇநேபாளம் இதற்கு மாற்றீடு ஒன்றை முன்வைக்கின்றது.2006 இல் முடிவிற்கு வந்த மாவோ போராளிகளின் கிளர்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளுடன் அந்த நாடும் போராடிக்கொண்டுள்ளது.

மோதலை முடிவிற்கு கொண்டுவந்த சமாதான உடன்படிக்கை சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாக  உறுதியளித்தது.

நேபாளத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மனித உரிமை மீறல்கள் சர்வதேசசட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் 60000 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – சிறிய எண்ணிக்கையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்த ஆணைக்குழுவை விசேட நீதிமன்றம்  மூலம் வலுப்படுத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறானதாக இந்தோனோசியாவின் முயற்சிகள் காணப்படுகின்றன – 1966 இல் உருவான சுகார்ட்டோவின் சர்வாதிகாரம் குறித்த தேசிய துயரம் குறித்த விவாதங்களை கருத்துப்பகிர்வுகளை இந்தோனேசியா சுமார் 60 வருடகாலமாக முடக்கிவைத்திருந்தது.

சுகார்ட்டோவின் 32 வருடகால சர்வாதிகார ஆட்சியின்போது இடதுசாரிகள் என சந்தேகிக்கப்படும் பலஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தற்போது இந்தோனேசிய ஜனாதிபதி சுகார்ட்டோ காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமீபகாலமனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ( 2003வரை) இழப்பீடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அந்த முயற்சியின் மூலம் என்ன நடந்தாலும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகவும் தாமதமான ஒன்றாகவே காணப்படும்

 

குற்றவாளிகளில் பலர் உயிரிழந்திருப்பார்கள் நீதிக்கு அப்பால் சென்றிருப்பார்கள்.

இலங்கை அரசாங்கமும் தனது முயற்சிகளின் மூலம் இவ்வாறானதொரு முடிவையே எதிர்பார்க்கின்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றதுஇ

இலங்கை அரசாங்கம் உயர்ந்த இலக்கு நோக்கி கவனம் செலுத்தவேண்டும்.

தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் தொடரும் வரை இலங்கை உண்மையான நல்லிணக்கத்தையோ அல்லது நிரந்தர சமாதானத்தையோ எதிர்பார்க்க முடியாது என எம்எஸ் அல் நசீவ் தெரிவித்தார்.