வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பதினொரு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக மஹோற்சவம் இடம்பெறும். எதிர்வரும்- 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள்-20 ஆம் திகதி புதன்கிழமை மாலை-04 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறும்.