இந்தோனேஷியாவின் சும்பாவா தீவுப் பகுதியில் இன்று ( 04) ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகியுள்ளது.   

இந்த பூமியதிர்ச்சி 5.9 ரிச்டர் அளவில் பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6.21 மைல்கள்) ஆழத்தில் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து உடனடி உயிரிழப்புகளோ அல்லது பாரிய சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 

மேலும், சுனாமி எச்சரிக்க எதுவும் விடுக்கப்படவில்லை.   இந்தோனேசியா பசிபிக் 'நெருப்பு வளையத்தில்' அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி இவ்வாறான பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.