இரண்டரை மணித்தியாலங்கள் பரதநாட்டியமாடி சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!
vidiyel 30 ஆனி 2026 · 06:52 8 views
Ad Space
Ad Space
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
ஆறு வயதுக்குட்பட்ட பிரிவில் ஐந்து வயதான இந்தச் சிறுமி உலக சாதனை படைத்த சிறுமியின் இந்தச் சாதனை "ராபா உலக சாதனை" புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாதனை நிகழ்வில் நடுவர்களாக, "ராபா உலக சாதனை" புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், "ராபா உலக சாதனை" புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
சாதனையின் பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரனால், "உலக நாட்டிய இளவரசி" என மகுடம் சூட்டி சிறுமி ரஜீவன் கம்சத்வனி கெளரவிக்கப்பட்டார்.