இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரகித, சரித், அருண நீதிமன்றத்தில் முன்னிலை!
Ad Space
Ad Space
பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஹரக் கட்டாவின் மனைவியிடம் முற்பணமாக 1200 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித் அபேசிங்க மற்றும் முன்னாள் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருண ஆகியோர் இன்று (17) இரண்டாவது முறையாக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பாதுகாப்பதாகவும், அவரை சாதாரண விளக்கமறியலில் வைப்பதாகவும் குறிப்பிட்டு இவர்கள் ஹரக் கட்டாவின் மனைவியிடம் 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் 25ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
Ad Space
Ad Space