உடன்​பாட்​டுக்கு வராவிட்​டால் ஈரான் மீது மீண்​டும் போர் தொடுக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் ட்​ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த குடியரசுக் கட்சி பிரச்சாரக் கூட்​டத்​தில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாம் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’யை (பேரழிவு சீற்றம்) அரங்​கேற்​றலாம் அல்​லது அவர்​கள் உடன்​பாட்​டுக்கு ஒப்​புக்​கொள்​வார்​கள். ஏற்​கெனவே ஆபரேஷன் மிட்​நைட் ஹேமர் மூலம் ஈரானின் அணு ஆயுத செறிவூட்​டும் திறனை நாம் முற்​றி​லுமாக அழித்​தோம்.

ராணுவ ரீதி​யாகவும், நிதி ரீதி​யாகவும் நாம் அவர்களை தோற்கடித்தோம். ஒப்​பந்​தத்​தின் மூலமாகவோ அல்​லது வேறு வித​மாகவோ, போர் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்​கிறேன்” என்றார்.

இந்த வார இறுதி​யிலேயே ஈரான் மீது தாக்​குதல் நடத்​தக்​கூடும் என்று துருக்​கிக்​கான அமெரிக்​கத் தூதர் டாம் பராக் கூறிய சில மணி நேரத்தில் ட்​ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்​கா​வும், இஸ்ரேலும் மீண்​டும் தாக்​கினால், விளைவு​கள் மோச​மாக இருக்​கும் என ஈரான் எச்​சரித்​துள்​ளது. இதுபற்றி அந்த நாட்​டின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “ஈரான் தாக்​கப்​பட்​டால், கடலடி கேபிள்​கள் முதல் ராணுவத் தளங்​கள் வரை முற்றிலுமாக அழிக்கப்படும். இனி இருக்​காது. அமெரிக்கா நெருப்​புடன் விளை​யாடக்​கூடாது” என தெரிவித்தார்.