அங்குருவாதொட்ட இரட்டை படுகொலை: முக்கிய சந்தேகநபர் கைது

அங்குருவாதொட்ட, உருதுதாவ இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். எனினும்,அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.