மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இதனை அவர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் சிறுபான்மையினத்தவரின் வாக்குகளை பெறுவதற்காக அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிகளை தோற்கடிப்பதே புதிய சட்ட மூலத்தின் நோக்கம் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதிகாரத்திற்கு வந்த ஒவ்வொருமுறையும் ரணில்விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது வரலாற்றை படிக்கும் அனைவருக்கும் தெரியும்இ பொலிஸ் அதிகாரங்கள் அரசமைப்பில் உள்ளதன் காரணமாகவே ஜனாதிபதி தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை காலத்திற்கு காலம் அழைத்து பொலிஸ் அதிகாரம் குறித்து உறுதிகளை வழங்குகின்றார் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரத்தை அரசமைப்பிலிருந்து அகற்றும் 22 வது திருத்தத்தை பிரபல சட்டத்தரணிகள் என்னிடம் கையளித்துள்ளனர் அடுத்த ஒருவாரத்தில் நாங்கள் இதனை ஜனாதிபதியிடம் கையளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.