ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் பிரதானிகளின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது வழங்கவோ முடியாது என சுகாதார சேவையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் பிரதானியினின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவினால் கையொப்பமிடப்பட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.