அவதானமாக செயற்படவும்!

நாட்டின் சில பகுதிகளில் நாளை (30) வெப்பக்குறியீடு, அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, “எச்சரிக்கை” மட்டத்தில் நீடிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் எனத் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால், உடலில் நீர்ச்சத்து குறைவடைதல் மற்றும் உப்பகற்றப்படுதல் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எனவே அடிக்கடி நீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருத்தல் மற்றும் அதிக கடினமான வேலைகளை தவிர்க்கவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.