அவலோகிதீஸ்வர போதிசத்துவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவருக்குப் பிணை!

அவலோகிதீஸ்வர போதிசத்துவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவக்குவை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை  ஒவ்வொரு திங்கட்கிழமையும் முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தில் உள்ள மனநல வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

பௌத்த போதனைகளுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கொடிதுவக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஜனவரி 15ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.