இணுவில் அறிவாலயத்தின் முழு நிலா நாள் சிறுவர் கலையரங்கும் திருக்குறள் மனனப்போட்டி பரிசளிப்பு விழாவும்!

இன்று(1) இணுவில் இணுவில் அறிவாலயத்தின் முழு நிலா நாள் சிறுவர் கலையரங்கும் திருக்குறள் மனனப்போட்டி பரிசளிப்பு விழாவும் சிரேஷ்ட சமூகவியலாளர் திருமதி பாலகுமாரி ஐங்கரன் தலைமையில் இணுவில் அறிவாலைய மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதமவிருந்தினராக இரைப்பை குடல் அறுவை சிகிட்சை நிபுணர் வைத்திய விநாயக மூர்த்தி துஸ்யந்தன் கலந்து கொண்டு கற்றலின் அவசியம், எப்படி கற்பது? போன்ற விடயங்களை தனது வாழ்வியல் உதாரணங்களுடன் அழகாக விளங்கத்துடன் மாணவர்களக்கு விளக்க உரை ஒன்றை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக அறிவாலைய முன்னாள் தலைவர் பாலசந்திரன் கலந்துகொண்டார்.

கௌர விருந்தினராக விவசாயி இரத்தின சிங்கம் ஸ்ரீநாதன் கலந்து கொண்டார்.

விருந்தினர்கள் அனைவரும் திருக்குறள் மனனப்போட்டி மாணவர்களுக்க பரிசில்களை வழங்கினார்கள்.

அறிவாலைய இணைத்தலைவர் கணபதி சர்வானந்தாவின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.