இணுவில் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலைய வளாகத்தில் மரங்கள் நடுகை

இணுவில் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை(12.04.2024) இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் ஒரு தொகுதிப் பயன்தரு மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
இளம் சமூக சேவகர் வ.தனகோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட ஓய்வுநிலைப் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா,  ஆசிரியர் இரா.அருட்செல்வம், இணுவில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சிவானுஜன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.