நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகாமைப் பணிப்பாளர் ர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
இராஜாங்கனை நீர்த்தேக்கங்கத்தில் ஆறு வான் கதவுகளும் ஆறு அடிக்கு திறந்துவிடப்பட்டு 8,352 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கங்கத்தில் இரண்டு வான் கதவுகள் நான்கு அடிக்கு திறந்துவிடப்பட்டு 2,442 கன அடி நீரும் வெளியேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.