இறைச்சி கடத்தலின்போது சிறிலங்கா காவல் துறைக்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம்!

80 இலட்சம் ரூபா பெறுமதியான மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை குளிரூட்டப்பட்ட லொறியில் கலன்பிந்துனவவில் இருந்து நுகேகொட கொண்டுசெல்லும்போது அவை கைப்பற்றப்பட்டதாக அநுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பன்பொல மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 56 மற்றும் 57 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி வழங்கப்படாத நிலையில் லொறியில் இறைச்சி கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த லொறியை நிறுத்தி சோதனையிட்டனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு தயாரானபோது, காவல் துறை உத்தியோகத்தர்களுக்கு சந்தேக நபர்கள் 300,000 ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்தும் காவல் துறையினர் அதனை நிராகரித்து அவர்களைக் கைது செய்து அநுராதபுரம் காவல் துறை தலைமையகத்துக்குக் கொண்டு சென்றனர்.