இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘ஐரிஸ் தேனா’ என்ற ஈரானிய கப்பலில் இருந்த 180 பேரில் சுமார் 30 பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
1979 ஆம் ஆண்டின் ‘சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு’ (International Convention on Maritime Search and Rescue) உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் படி, கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.





