இளம் தம்பதி வாகன விபத்தில் பலி

வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கடுவெல பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்குத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஓட்டோ மீது பின்னால் வந்த லொறி மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த 27 வயதுடைய கணவனும், 25 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்