அமெரிக்கா-இஸ்ரேலுடனான போரில் ரஜினி பாட்ஷா படத்தில் கூறுவதை போன்று ஈரான் ஒரு தரம் அடித்தால் அது நூறுதரம் அடித்தமாதிரி. அந்த அடியை இவர்கள் தடுத்தாலும் நஷ்டம் தடுக்காது விட்டாலும் நஷ்டம் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த யுத்தத்தில் ஈரானின் 3000 டொலர் பெறுமதியான ஒரு டிரோன் தாக்குதலை தடுப்பதற்காக இஸ்ரேல் 3 தொடக்கம் 4 மில்லியன் டொலர் ஐயன்டோமை பயன்படுத்துகின்றனர். ஈரானின் டிரோன் இஸ்ரேலில் விழுந்தாலும் நஷ்டமே, தடுத்தாலும் நஷ்டமே.
அமெரிக்கா-இஸ்ரேலுடனான இந்தப்போரில் ரஜினி பாட்ஷா படத்தில் கூறுவதை போன்று கூறுவதென்றால் ஈரான் ஒரு தரம் அடித்தால் அது நூறுதரம் அடித்தமாதிரி என்றார்.





