‘சீருடைக்கு மதிப்பளித்து இவ்விடத்தில் இருந்து செல்கின்றேன். இல்லையென்றால் நான் உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்’ என வெலிக்கடை காவல் துறை போக்குவரத்து சார்ஜன்டனை மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ், தனியார் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் இராஜகிரிய தேவாலயத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது ஹெட்டியவத்தையிலிருந்து நுகேகொட நோக்கி பயணித்த தனியார் பஸ், பஸ் தரிப்பிடத்திலிருந்து அப்பால் நிறுத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அப்போது, பஸ் நிறுத்துமிடத்துக்கு வெளியே பேருந்தை நிறுத்திய போது. இறங்கிவந்த சாரதி கையை நீட்டி. கான்ஸ்டபிளை மிரட்டி. ”நீதிமன்றத்தில் செய்ய முடியலைன்னா. எங்காவது போடு. அது பெரிய விஷயம் இல்லை. எனினும். சாலையில் இருக்க வேண்டாம். பஸ்ஸை ஏற்றி உன்னை கொல்லுவேன் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நினைவில் வைத்துக்கொள்.’ அது யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. என் பெயர் தில்ஷன். கவனமாகக் கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறு என்ற அவர் கொலை மிரட்டல் விடுத்தார்
அப்போது. எந்த பிரச்சனையும் இல்லை. நன்றி என்று கான்ஸ்டபிள் பதிலளித்தார்.
சந்தேகத்திற்கிடமான சாரதியின் செயலையையும். அச்சுறுத்துவதையும் கான்ஸ்டபிள் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில். மஹரகம நிலமார பிரதுசத்தில் வைத்து. புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.