உயிரிழப்புகளிற்கு ஆபத்தான ஒவ்வாமையே காரணம்

இலங்கையின் அரசவைத்தியசாலைகளில் சமீபத்தில் இடம்பெற்ற ஆறு மரணங்களில் ஐந்து மரணங்கள் அனாபிலாக்ஸி என்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒவ்வாமையினால் இடம்பெற்றுள்ளது என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

மருந்துகள் ஒவ்வாமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் நிபுணர்கள் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அனாபிலிக்ஸ் ஒவ்வாமை மேலாண்மை அவசரகால மேலாண்மை குறிஅவசரகால மேலாண்மை குறித்த தேசிய மற்றும் நிறுவன வழிகாட்டுதல்கள்நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என நிபுணர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது