உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பும், உரும்பிராய் இளைஞர் சனசமூக நிலையமும் இணைந்து புலம்பெயர் வாழ் நண்பர்களின் நிதி அனுசரணையில் ஏற்பாடு செய்து நடாத்திய வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை உரும்பிராய் இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் பயன்தரு மரக் கன்றுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டன.






