ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலானை பகுதியில் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (09) மாலை, கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்