ஐ.நா. பிரதிநிதிகளை சந்தித்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நீதி அமைச்சில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில், சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறுவர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிப்பதற்கான வசதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்திற்கு இணங்க, இந்த வீடியோ தொழில்நுட்ப சாட்சிய முறை குறித்து நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.