ஒருகொடவத்தையில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் கைப்பற்றல்!

கொழும்பு – ஒருகொடவத்தை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காக இந்த உணவு பொருட்கள் இவ்வாறு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.