கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு

சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும்இ அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பபுவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்துஇ நாடுதிரும்பும் வழியில்இ அவர் சிறிலங்காவுக்கு வருகைதந்தார்.

பபுவா நியூகினியாவிலிருந்து பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம் நேற்றிரவு 11.35 அளவில்இ பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர்இ கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிஇ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துஇ பிரான்ஸ் ஜனாதிபதியை வரவேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்த நிலையில்இ இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாமும்இ 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.