கடுவலையில் தாக்குதல் காயங்களுடன் நிர்வாணமாக காணப்பட்ட சடலம்!

கடுவலை வெவபாறை பகுதியின் முட்புதரில் இனந்தெரியாத ஆண் ஒருவரின்  சடலம்  நிர்வாணமாக மீட்கப்பட்டதாக  கடுவலை பொலிஸார்  தெரிவித்தனர்.

சடலம் 30 முதல் 40 வயதுடைய ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் இந்தச் சடலத்தில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொள்வார்கள்.

சமீபத்திய செய்திகள்