அம்பாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில ‘துருசெவன’ சந்தியில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பஸ்ஸும், திஸ்ஸமஹாராமவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பஸ்ஸும் இவ்வாறு மோதியுள்ளன.
விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், படுகாயமடைந்த சுமார் 40 பயணிகள் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





