கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது!

அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அம்பாந்தோட்டை , குடாவெல்ல மோதரவத்த பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுயைடவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 22 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.