களுகங்கை நீர் மட்டத்தில் வேகமான அதிகரிப்பு!

களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இரத்தினபுரியில் வெள்ள அபாயம்  ஏற்பட்டுள்ளது.

களுகங்கையின் நீர்மட்டம் புளுங்குபிட்டி நீர் மட்டத்தில்  7ன் எல்லையை நெருங்கியுள்ளது.

இதன்காரணமாக,  இரத்தினபுரி அலுபொத்த பிரதான பஸ் பாதையில்  ஓயா பகுதியிலிருந்து மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதிக்கு  செல்லக்கூடிய பல வீதிகளிலும் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளதோடு வீடுகளும் பாதிப்படைந்துள்ளது.

நீர் மட்டம் 07 என்ற  எல்லையை மீறினால்  பெரும் வெள்ளம் அபாயம்  ஏற்படும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.