சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று சனிக்கிழமை (14.03.2026) காங்கேசன்துறையிலுள்ள பிரதேசசபை மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது.
வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் குறித்த போட்டிகள் இடம்பெற்றன.






