காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானையின்  தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர்  பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ  பகுதியில் 25 திகதி நேற்று (25) சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்  நேரியகுலம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர்  என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் செட்டிகுளம் பொலிஸார்  ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்