காட்டு யானை தாக்கி மின்சார வேலி பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர் பலி!

வனாத்தவில்லு – தேனுவர பகுதியில் மின்சார வேலி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பன்முக சேவை ஊழியர் ஒருவர், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வனாத்தவில்லு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது. இவர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனாத்தவில்லு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவராவார்.

நேற்று இரவு ஏனைய ஊழியர்களுடன் காவற்பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்கு முன்னர், மற்றுமொரு தேவைக்காக வனப்பகுதிக்குள் சென்றபோதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.