காரின் மீதேறி கெப் விபத்து: நால்வர் காயம்

அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிகுரானையிலிருந்து அம்பாறை நோக்கி கெப் வண்டி சென்றதுடன், கார் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

கெப் வண்டியின் டயர் ஒன்றில் காற்று இல்லாமற் போய்விட்டது. இதனையடுத்து சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போய், காரின் மேல் ஏற்றிவிட்டார் என அறியமுடிகின்றது.

இந்த சம்பவத்தில், கெப் வண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.