காலி பெந்தோட்டைக் கடலில் சக நண்பர்களுடன் இணைந்து நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்.சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மொரட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவரான கதிர்காமநாதன் விதுசன் (வயது-25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.




