கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத அதிகாரப்பகிர்வை உறுதி செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்ட 100 நாள் செயல் திட்டத்தின் ஓராண்டை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (31) வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த போராட்டமானது பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (31) கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றுள்ளது இதில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.