கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (19) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்ட விரோத போதைப்பொருள் விநியோகம், சட்ட விரோதமாக மீன்பிடித்தல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடு, மனித கடத்தல், மான் பூங்காக்கள் மீதான கண்காணிப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிழக்கு மாகாண இராணுவ தளபதி, கிழக்கு மாகாணத்தின் கடற்படை ரியர் அட்மிரல், கிழக்கு மாகாணத்தின் விமானப்படை தளபதி ஆகியோர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.