”குழு மோதல் தான் விலை குறைப்புக்கு வழி வகுத்தது”

பால்மா இறக்குமதியாளர்களுடன் பொது நிதிக் குழுவின் (COPF) மோதலால் பால் மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார்.

“குழுவில் நடந்த மோதலுக்குப் பிறகு, பால்மா மீதான வரியை அதிகரிக்க நாங்கள் மறுத்துவிட்டோம், மேலும் சூத்திரம் இல்லாத நிலையில் சந்தைப் போட்டியின்மையால் சீராக்கியின் பிழைகளைக் கண்டறிந்தோம், அதனால் கதை முற்றிலும் மாறுபட்ட திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிப்புக்கு பதிலாக, இப்போது விலைகள் குறைந்துள்ளன. ஒரு கிலோகிராம் ரூபாய் 150இனால் குறைந்துள்ளது என  டி சில்வா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.