யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொருவருக்கும் இடையே ஏற்பட்ட நீண்டகாலத் தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கோட்டகலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



