காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கெசல்கமுவ ஓயாவில் நீராடிய 16 வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை (04) மாலை 03.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
05 பேர் கொண்ட நண்பர்களுடன் குறித்த ஓயாவிற்கு சென்று நீராடிக் கொண்டிருந்த வேளை, சிறுவனை நீர் இழுத்து சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல்போன சிறுவன் நோர்வூட் அயரபி தோட்டத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காணாமல்போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பிரதேச மக்களும் ஈடுபட்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





