கெசல் கமுவ ஓயாவில் ஐந்து பிள்ளைகளின் தயார் சடலமாக மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல் கமுவ ஓயாவில் இருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சடலம்  இன்று செவ்வாய்கிழமை (18) இடம் பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த வேளை திடீரென காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே, குறித்த பெண் கெசல்கமுவ ஓயாவில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு உறவினர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

 

இதேவேளை, சம்பவம் இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கப்பட்ட போது, சடலமாக மீட்கப்பட்ட பெண் நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான ஆறுமுகம் தனலெட்சுமி என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அட்டன் நீதிமன்ற நீதவானின் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணையாளர் திருமதி தனலெட்சுமி தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.