கெஹலிய ரம்புக்வெல்லவின்பிணை மனு தொடர்பான உத்தரவு ஏப்ரல் 3 ஆம் திகதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் உத்தரவு ஏப்ரல் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸங்க இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.