கொட்டாஞ்சேனை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில், கடந்த 7ஆம் திகதி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
அதற்கமைய, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மதியம் அடுருப்பு வீதி பகுதியில் கைது செய்துள்ளனர்.
32 வயதான சந்தேகநபர் கொழும்பு 13, அடுருப்பு வீதிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாஞ்சேனை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



