கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு கலைஞர்.வேல் ஆனந்தன் விஜயம்

நாடறிந்த ஆடற் கலைஞரும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளருமான கலைஞர்.வேல் ஆனந்தன்  திங்கட்கிழமை (25.03.2024) கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

கலாசாலையில் தனது பணிக் காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான நினைவுகளை அவர் மீட்டி மகிழ்ந்ததுடன் தமிழிசை தமிழ் ஆடல் குறித்த தனது எண்ணப் பதிவுகளையும் பகிர்ந்து கொண்டார்.