சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு 03 இற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (17) கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும், குறித்த மோசடிக்குத் துணை நின்ற குற்றச்சாட்டின் கீழ், சம்பந்தப்பட்ட மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வங்கியின் உதவி முகாமையாளர் கொழும்பு 02 பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு 03 மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.




