சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் !

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று திங்கட்கிழமை (22)  ஆரம்பமாகியது.

குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றையதினம் பௌர்ணமி வழிபாடுகள் விகாரையில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகாமாக  இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இது இன்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் வேளை நிறைவடையும்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.